உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலாவுக்காக வெளிநாட்டு பயணிகள் வருகை புரிவது வழக்கம். அவ்வாறு ரஷ்யாவில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் டெல்லிக்கு வந்துள்ளார். அங்குள்ள கோவில்களுக்கு சென்று சுற்றிப் பார்த்த அவர் இந்தியாவின் சிறப்பு பற்றியும், அங்குள்ள மனிதர்களின் மனிதநேயத்தை பற்றியும் வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது அங்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த குடும்பத்தினர் இவருக்கு மதிய உணவை பகிர்ந்து உண்டனர். அதில் ரொட்டி,தால், சப்ஜி மற்றும் அப்பளம் போன்றவற்றையும் வைத்து இவருக்கு வழங்கினர். அதனை ருசித்து சாப்பிட்ட அவர் மிகவும் அருமையாக உள்ளது என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் இந்திய குடும்பத்தினர் காட்டிய அன்பிற்கு மிகவும் நன்றி என்றும், “இந்தியாவிற்கு வாங்க ஆன்மீகத்தின் உண்மையான அர்த்தத்தை இந்தியா உங்களுக்கு காட்டும்” என்று மிகவும் மகிழ்ச்சியுடன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் இணையதள வாசிகள் பலரும் லைக் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.