
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆஸ்கார் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆஸ்கார் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற பெருமையை பெற்று வரலாறு படைத்துள்ளது நாட்டு நாட்டு நாட்டு பாடல். இந்த மகத்தான சாதனையை படைத்த ஆர்ஆர்ஆர் பட குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி உலகம் முழுவதும் 1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து பல விருதுகளை குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.