
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக இண்டிகோ செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு எதிராக வருமான வரித்துறை ரூ. 944.20 கோடி அபராதத்தை விதித்துள்ளது. இது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு மதிப்பீட்டு ஆண்டுக்கான அபாராதமாக இந்த தொகை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இண்டிகோ நிறுவனம் “தங்கள் நிறுவனம் வருமான வரி கமிஷனர் முன்பாக தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்று தவறாக புரிந்து கொண்ட காரணத்தினால் இந்த அபராதம் தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியது. இதைத் தொடர்ந்து தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த அபராதத்தை எதிர்த்து இண்டிகோ நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. மேலும் இந்த நடவடிக்கையால் இண்டிகோ நிறுவனத்தின் நிதி, இயக்கம் போன்றவற்றில் எந்தவித பாதிப்பும் இருக்காது என கூறியுள்ளது.