இன்டிகோ விமான நிலையம் ஏர்பஸ் நிறுவனத்துடன் 500 விமானங்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதனை இந்தியாவின் மற்றொரு சாதனை என மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா பாராட்டியுள்ளார். தனியார் விமான நிறுவனமான இன்டிகோ ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கானை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

இந்நிலையில் விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடம் இன்டிகோ 500 ஏ 320 ரக விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னதாக மத்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியாவை கையகப்படுத்திய டாட்டா குழுமம் மேலும் அதனை விரிவு படுத்துவதற்காக ஐரோப்பாவை சேர்ந்த ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 420 விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது. அதனை மிகப்பெரிய ஒப்பந்தமாக கருதினர்.

அதனை இன்டிகோ நிறுவனம் முறியடித்து சாதனை படைத்துள்ளது. இது இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து துறையில் உண்டான வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது. சிவில் விமான போக்குவரத்தில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலரும் புதிய வளர்ச்சியின் அடிப்படையில் வருமானத்தை ஈட்டுகிறது. இதுவரை யாரும் இவ்வளவு பெரிய விமானம் வாங்கும் ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு செய்ததில்லை. இந்த ஒப்பந்தம் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்க வழிவகுக்கும் என மத்திய அமைச்சர் கூறினார்.