ஏர் ஹெல்த் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த மற்றும் மிக மோசமான விமான நிறுவனங்களை வரிசைப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விமான சேவை தரம், பயணிகளின் வசதி, உணவு வழங்குதல் முறை, பயணிகளின் கவனிப்பு ஆகிய காரணிகளை கொண்டு விமான சேவை நிறுவனங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிறுவனங்கள் காலநிலை மாற்றங்கள், அவசர காலங்களில் கையாளும் முறைகள், இழப்பீடு கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் முறை போன்றவற்றையும் அடிப்படையாக கொள்ளப்படுகிறது.

இந்த கணக்கெடுப்பில் 109 விமான நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த விமான நிறுவனங்கள் குறித்து 54 நாடுகளில் பயணிகளிடம் கருத்தையும் கேட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் மிக மோசமான விமான சேவை பட்டியலில் இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் 103 இடத்தில் உள்ளது. இதற்கு நேர் எதிராக சிறந்த விமான சேவை நிறுவனமாக பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளது. கத்தாரின் ஏர்வேஸ் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.