
சர்வதேச டெஸ்டில் 500 வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்..
இங்கிலாந்துக்கு எதிராக 3வது டெஸ்டில் புதிய மைல் கல்லை எட்டினார் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். தனது 98 வது டெஸ்ட் போட்டியில் 500-வது விக்கெட் வீழ்த்தி அஸ்வின் புதிய சாதனை படைத்தார். சர்வதேச டெஸ்டில் அனில் கும்ப்ளேவுக்கு பிறகு 500 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய வீரர் அஸ்வின். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் சாக் கிராலியை 500வது விக்கெட்டாக வீழ்த்தினார் அஸ்வின். சர்வதேச அளவில் டெஸ்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 9வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் படத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 21 டெஸ்டில் 98 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்.
ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆனார்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் அவர் ஒரு விக்கெட் மட்டுமே தொலைவில் இருந்தார், மேலும் சாக் கிராலியை 15 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்த பிறகு, ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் மைல்கல்லை எட்டினார். க்ராலி மற்றும் பென் டக்கெட் இடையேயான 90 ரன் தொடக்க பார்ட்னர்ஷிப்பை தமிழக பந்துவீச்சாளர் முறியடித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் :
முத்தையா முரளிதரன் (இலங்கை) – 800 விக்கெட்டுகள்
ஷேன் வார்ன் (ஆஸ்திரேலியா) – 708 விக்கெட்டுகள்
ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) – 695* விக்கெட்டுகள்
அனில் கும்ப்ளே (இந்தியா) – 619 விக்கெட்டுகள்
ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) – 604 விக்கெட்டுகள்
கிளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா) – 563 விக்கெட்டுகள்
கர்ட்னி வால்ஷ் (வெஸ்ட் இண்டீஸ்) – 519 விக்கெட்டுகள்
நாதன் லயன் (ஆஸ்திரேலியா) – 517* விக்கெட்டுகள்
ஆர் அஸ்வின் (இந்தியா)- 500* விக்கெட்டுகள்
இரண்டாவது வேகமான முதல் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் :
Ravi Ashwin is the fastest Indian in Test cricket to:
50 wickets, 100 wickets, 150 wickets, 200 wickets, 250 wickets, 300 wickets, 350 wickets, 400 wickets, 450 wickets and now 500 wickets. 🐐 pic.twitter.com/94OzYGang8
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 16, 2024