
ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரின் சதத்தால் இந்திய அணி 34 ஓவரில் 267/2 ரன்கள் என ஆடி வருகிறது..
நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஹைதராபாத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 12 வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் மதியம் 1:30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இவர்கள் இருவரும் பொறுமையாக இன்னிங்க்ஸை தொடங்கினர். பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் இந்திய அணி எடுத்திருந்தது. அதன் பிறகு இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக லாக்கி பெர்குசன் வீசிய 8வது ஓவரில் கில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 22 ரன்கள் விளாசினார்.
தொடர்ந்து ரோஹித் சர்மாவும் ஜேக்கப் டஃபி வீசிய 10வது ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். தொடர்ந்து இருவரும் ஓவருக்கு பவுண்டரி சிக்ஸ் என விளாசினார். இருவருமே டி20 போல அதிரடியாக ஆட பவுலர்களால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. 24.1 ஓவரில் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. அதன் பிறகு ரோஹித் சர்மா டிக்னர் வீசிய 26 ஓவரில் சதம் விலாசினார். இது ரோகித் சர்மாவுக்கு 30 ஆவது ஒருநாள் சதமாகும். ரோகித் சர்மா 1100 நாட்களுக்கு பின் சதம் விளாசி உள்ளார். அதன் பின் கில் சதம் விலாசினார். கில்லுக்கு இது 4வது ஒருநாள் சதமாகும். இதையடுத்து பிரேஸ்வெல் வீசிய 27ஆவது ஓவரில் ரோகித் சர்மா மற்றும் டிக்னர் வீசிய 28 வது ஓவரில் கில் இருவரும் அவுட் ஆகினர். ரோஹித் சர்மா 85 பந்துகளில் (9 பவுண்டரி, 6 சிக்ஸர்) 101 ரன்களும், கில் 78 பந்துகளில் (13 பவுண்டரி, 5 சிக்ஸர்) 112 ரன்களும் எடுத்தனர். தற்போது விராட் கோலி (27) – இஷான் கிஷன் (17) ஆடி வருகின்றனர். இந்திய அணி 33 ஓவரில் 267/2 ரன்கள் என ஆடி வருகிறது.
𝗖𝗘𝗡𝗧𝗨𝗥𝗬! 🔥
Talk about leading from the front! 🙌🏻
A magnificent century from #TeamIndia captain @ImRo45 💯
Follow the match ▶️ https://t.co/ojTz5RqWZf…#INDvNZ | @mastercardindia pic.twitter.com/iR3IJH3TdB
— BCCI (@BCCI) January 24, 2023
CENTURY number 4️⃣ in ODI cricket for @ShubmanGill!
The #TeamIndia opener is in supreme form with the bat 👌👌
Follow the match ▶️ https://t.co/ojTz5RqWZf…#INDvNZ | @mastercardindia pic.twitter.com/OhUp42xhIH
— BCCI (@BCCI) January 24, 2023