அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் பும்ரா..

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. காயத்திலிருந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பிய பும்ராவிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அயர்லாந்தின் டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதையடுத்து அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் பால்பிர்னி ஆகிய இருவரும் பேட்டிங் செய்ய களமிறங்கினர். இந்திய அணியின் கேப்டன் பும்ரா தனது முதல் ஓவரை வீசினார்.. முதல் பந்தை பௌண்டரிக்கு விரட்டினார் பால்பிர்னி. அதன்பின் 2வது பந்தில் ஸ்டெம்பை (பால்பிர்னி 4 அவுட்) தெறிக்க விட்டார் பும்ரா. தொடர்ந்து ஐந்தாவது பந்திலும் லோர்கன் டக்கர் பின்னால் அடிக்க முயன்று கீப்பர் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி  வெளியேறினார்..

பும்ரா முதல் ஓவரிலேயே 4 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்து பழைய பார்முக்கு வந்தார். இதையடுத்து தற்போது பால் ஸ்டிர்லிங் மற்றும் ஹேரி டெக்டர் இருவரும் ஆடி வருகின்றனர்.  அயர்லாந்து அணி 4 ஓவரில் 21/2  ரன்கள் எடுத்து ஆடி வருகிறது..

இதற்கிடையே பும்ரா விக்கெட் எடுத்ததை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். பும் பும் பும்ரா என அவரை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்..

இந்திய டி20 அணியின் பிளேயிங் லெவன் :

ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஜஷ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசீத் கிருஷ்ணா.

அயர்லாந்து டி20 அணியின் பிளேயிங் லெவன் :

பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி,  ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், லோர்கன் டக்கர் (WK), மார்க் அடேர், ஜோசுவா லிட்டில், பேரி மெக்கார்த்தி, பெஞ்சமின் ஒயிட், கிரேக் யங்.

https://twitter.com/RolexShetty45/status/1692541541439648086