
கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ஒருநாள் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
கொழும்பில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதே நேரத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். ரோஹித் சர்மா 241 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிராக தனது 22வது ரன் எடுத்த உடனேயே இந்த சிறப்பு மைல்கல்லை எட்டினார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். அதே சமயம் இந்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 205 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த பட்டியலில் இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மூன்றாவது இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 259 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்த 15வது வீரர் என்ற பெருமையை ரோஹித் பெற்றுள்ளார்.50 ஓவர் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்த வரலாற்றில் ஒரே வீரராக, நவம்பர் 2014 இல் ஈடன் கார்டனில் இலங்கைக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் – அல்லது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் – 264 ரன்களின் சாதனையையும் ரோஹித் பெற்றுள்ளார்.

இதுவரை ரோஹித் சர்மா 248 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த 248 ஒருநாள் போட்டிகளில் 241 இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா 10031 ரன்கள் எடுத்துள்ளார். ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 30 சதங்களை அடித்துள்ளார். இது தவிர, ரோஹித் சர்மா 50 முறை அரைசதம் கடந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 3 முறை இரட்டை சதத்தை கடந்த ஒரே பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா மட்டுமே. ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில், ரோஹித் சர்மா 49.14 சராசரி மற்றும் 90.30 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை எடுத்துள்ளார்.
அதேசமயம், இந்தியா-இலங்கை போட்டி பற்றி பேசினால், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். இந்திய அணி 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் துவக்க வீரர் ஷுப்மான் கில் 25 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இருப்பினும் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா 48 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார். மேலும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேஎல் ராகுல்-இஷான் கிஷன் ஜோடி 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது. பின் ராகுல் 39 ரன்களிலும், இஷான் கிஷன் 33 ரன்களிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து சீரான இடைவெளியில் ஹர்திக் பாண்டியா 5, ஜடேஜா 4, பும்ரா 5 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின் குல்தீப் யாதவ் டக் அவுட் ஆக, கடைசியில் அக்சர் படேல் 26 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். சிராஜ் 5 ரன்னுடன் களத்தில் இருந்தார். இலங்கை அணி சார்பில் துனித் வெல்லலகே 5 விக்கெட் எடுத்து அசத்தினார்.
இந்திய அணி நன்றாக தொடங்கிய நிலையில், 80 ரன்னுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது. இலங்கை இளம் வீரரான துனித் வெல்லலகே சுப்மன் கில், விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகிய டாப் இந்திய பேட்டர்களை தனது சுழலில் சிக்க வைத்தார்.. தற்போது இலங்கை அணி களமிறங்கி ஆடி வருகிறது.
🚨 Milestone 🔓
1⃣0⃣0⃣0⃣0⃣ ODI runs & counting 🙌 🙌
Congratulations to #TeamIndia captain Rohit Sharma 👏 👏
Follow the match ▶️ https://t.co/P0ylBAiETu #AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/STcUx2sKBV
— BCCI (@BCCI) September 12, 2023