
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை அருகே உள்ள கிராமத்தில் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் மாவட்டம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதல் வருடம் படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரது தாயார் கூட்டி சென்றுள்ளார். மாணவியின் வயிறு வலி பாதிப்பை அறிய மருத்துவர் ஸ்கேன் செய்துள்ளார். அந்த ஸ்கேனில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த மாணவி இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் மாணவியிடம் விசாரித்துள்ளார்.
மாணவி இன்ஸ்டாகிராம் மூலமாக களியல் பகுதியில் வசித்து வரும் அஜய் (20) என்ற இளைஞனுடன் பழகி வருவதை கூறினார். மேலும் அந்த இளைஞனுடன் திற்பரப்பில் உள்ள ஒரு விடுதிக்கு சென்றதாகவும் அங்கு தன்னை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அஜய் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.