சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் த்ரெட்ஸ் என்ற பெயர்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அறிமுகமான ஒரே நாளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் களமிறங்கியுள்ள புதிய செயலி தான் இது. அறிமுகமான முதல் நாளே குறைந்த நேரத்தில் ஒரு கோடி பயனர்கள் இதில் இணைந்துள்ளனர். ஆனால் இதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. த்ரெட்ஸ்செயலியில் இணைந்தவர்கள் அதிலிருந்து வெளியேற முடியாமல் தவிப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த செயலியில் இணைய முடியும்.

அதில் இணைவது சுலபம் என்ற போதிலும் வெளியேறுவது சாத்தியமில்லாத ஒன்றாகும். சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களுக்கு விருப்பம் இல்லாத பட்சத்தில் வெளியேறிவிடலாம். ஆனால் இந்த புதிய செயலியில் இது நடக்காது. த்ரெட்ஸ் கணக்கை நீக்க வேண்டும் என்றாலும் இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்க வேண்டும். இதனை தற்காலிகமாக டீஆக்டிவேட் செய்யலாம் என்றாலும் வாரம் ஒரு முறை மட்டுமே செய்ய முடியும். குறிப்பாக இன்ஸ்டாகிராம் செயலியை டி ஆக்டிவேட் செய்து விட்டால் இந்த கணக்கும் டி ஆக்டிவேட் ஆகிவிடும். இப்படி பல சிக்கல்கள் எழுந்துள்ளன.