
மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியின் பொதுக்கூட்டம் ஒரு இடத்தில் நடைபெற்ற நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி அபிஷேக் பானர்ஜி மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஒருவர் தேசிய கீதத்தை தவறாக பாடிவிட்டார். இதற்கு பாஜக கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகிறது.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் டாக்டர் சுகந்த் மஜும்தார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதோடு அபிஷேக் அவர்களே தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து அதை உங்களால் சரியாக கூட பாட முடியவில்லை. இது மிகப்பெரிய அவமரியாதை. வெட்கேடு என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
What is this @abhishekaitc?
You can’t even respect the National Anthem and sing it correctly. Singing it incorrectly shows your disrespect for it.
Shame ! pic.twitter.com/PLFTf7OBr8
— Dr. Sukanta Majumdar ( মোদীজির পরিবার ) (@DrSukantaBJP) February 11, 2023