இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களை சிலர் தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரு பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் அந்த பெண் தன்னுடைய முன்னாள் காதலனுடன் நெருக்கமாக இருந்தது வருங்கால மாப்பிள்ளைக்கு தெரியவந்தது. இதனால் அவர் திருமணத்தை நிறுத்தினார். இந்நிலையில் அந்த பெண் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளையை பழிவாங்க துடித்தார்.

இதற்காக அவர் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இதனால் அவரின் வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் இருக்கும் நிலையில் இது தொடர்பாக அவர் தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட அது மிகவும் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற பொய்யான வழக்குகளால் சில உண்மைகள் கூட தெரியாமல் போய்விடுகிறது என பலரும் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில் அந்த பெண்ணின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.