
விசாரணை படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், தினேஷ் போன்ற ஒருவர் இல்லை என்றால் என்னால் விசாரணை திரைப்படத்தை இயக்க முடியாது. அவருடைய ஆர்வமும் அற்பணிப்பும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.” வெற்றிமாறனின் இந்த வார்த்தைகள், ‘விசாரணை’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணத்தை நமக்கு உணர்த்துகிறது.

வெற்றிமாறன், ஒரு நடிகராக நான் இருந்தாலும் கூட இவ்வளவு கடினமாக நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டு சென்று இருப்பேன் என கூறினார். தினேஷின் நடிப்பு எவ்வளவு கடினமானதாக இருந்திருக்கும் என்பதை நமக்கு உணர்த்துகிறது. தினேஷின் ஒவ்வொரு காட்சியும், அவர் எவ்வளவு ஆழமாக தன் கதாபாத்திரத்தில் இணைந்து கொண்டார் என்பதை நமக்கு காட்டுகிறது.
விசாரணை’ திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம், தினேஷின் அர்ப்பணிப்பு மற்றும் வெற்றிமாறனின் தெளிவான இயக்கம் தான் விசாரணை போன்ற நல்ல ஒரு திரைப்படம் இன்றும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது.