
சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் பொன்னப்பன் கிராஸ் தெருவில் தூய்மை பணியாளராக சின்னம்மாள் என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது குப்பையில் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள ஐ போன் ஒன்று கிடந்துள்ளது. இதனை மீட்டு தனது மேல் அதிகாரியிடம் தகவல் தெரிவித்தார். பின்னர் செல்போனின் நம்பர் மூலம் உரிமையாளருக்கு தொடர்பு கொண்டு செல்போன் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோன்று மற்றொரு தூய்மை பணியாளர் இருதய மரி என்பவர் குப்பையில் கிடந்த 8 கிராம் மதிப்புள்ள ரூபாய் 70 ஆயிரம் தங்க செயினை தங்களது மேலதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். இதன் பின் இந்த தங்க செயின் கே.கே நகர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. நேர்மையாக நடந்து கொண்ட தூய்மை பணியாளர்களுக்கு பொதுமக்கள் பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.