
ஐபிஎல் 2025 தொடரில் இதுவரை ஒரே ஒரு “சிறந்த கேட்ச்” என்று கூறக்கூடிய மாயமான நிகழ்வு நடைபெறவில்லை. ஆனால் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே-ஹைதராபாத் போட்டியில், ஹைதராபாத் அணியின் கமிந்து மெண்டிஸ் அற்புதமான ஒரு கேட்சை பிடித்து வீரர்களின் கவனத்தை ஈர்த்து அந்தக் குறையை நிவர்த்தி செய்து விட்டார். அதாவது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், சிஎஸ்கே அணியின் அபாயகரமான ஆட்டக்காரர் டிவால்ட் பிரேவிஸை அவர் அழகான முறையில் அவுட் செய்தார்.
போட்டியில் முதலில் களமிறங்கிய சிஎஸ்கே, தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் அறிமுக வீரர் டெவால்ட் பிரேவிஸ் பல அட்டகாசமான பவுண்டரிகளை விளையாடி அணியை மீட்டார். அந்த வேளையில், ஹர்ஷல் படேல் வீசிய ஸ்லோ பந்தை பிரேவிஸ் அடித்தார். ஆனால் எதிர்பார்த்த உயரம் பெறாமல் பந்து நீண்ட ஆஃப் பகுதியில் சென்றது. அங்கு காத்திருந்த கமிந்து மெண்டிஸ், இடது பக்கம் பறந்து “சூப்பர்மேன்” போல் அபாரமாக கேட்கச் பிடித்து, போட்டியின் ஒர் அசத்தலான தருணத்தை உருவாக்கினார்.
Only a catch like that could’ve stopped that cameo from Brevis! 🤯
Kamindu Mendis, take a bow 🙇#CSK 119/6 after 14 overs.
Updates ▶ https://t.co/26D3UalRQi#TATAIPL | #CSKvSRH | @SunRisers pic.twitter.com/NvthsQfpUj
— IndianPremierLeague (@IPL) April 25, 2025
இந்த கேட்ச் நிகழவில்லை என்றால், பிரேவிஸ் தொடர்ந்து ஆடியிருப்பார் மற்றும் சிஎஸ்கே பெரிய ஸ்கோர் செய்யும் வாய்ப்பு இருந்திருக்கும். மேலும், அவருக்கு தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடையும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் மெண்டிஸ் அதனை தடுத்தார். பிரேவிஸின் அவுட்டிற்குப் பிறகு சிஎஸ்கே அணியின் பேட்டிங் மெதுவாகி, தீபக் ஹூடா மற்றும் மகேந்திர சிங் தோனி விரைவாக ரன்கள் சேர்க்க முடியாமல் திணறினர். மேலும் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி சென்னையை வீழ்த்தி சேப்பாக்கம் மைதானத்தில் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.