
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆனது வரும் 28ஆம் தேதி மோதுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணியளவில் தொடங்கி சில மணி நேரத்திலேயே விற்றுவிட்டது. இதனால் டிக்கெட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். சேப்பாக்கத்தில் போட்டி நடைபெற்றால் ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்குவது கடினமாக இருப்பதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள். காத்திருந்தாலும் கூட டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறி வருகிறார்கள் . இதற்கிடையில் பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்யபட்டு வருவதாக பல தகவல் வெளியாகி வருகிறது. குறைந்தபட்ச டிக்கெட் 1700 முதல் 15,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் 50,000 முதல் 1 லட்சம் வரை கள்ளச் சந்தையில் விற்கப்படும் நிலையில் இவ்வளவு விலை கொடுத்து வாங்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் .
ஒரு சிலர் whatsapp மற்றும் சமூக வலைதளங்களில் தன்னிடம் டிக்கெட் இருப்பதாகவும் அதை வாங்கிக் கொள்ள தன்னுடைய நம்பருக்கு கால் செய்யுங்கள் என்று கூறி வருகிறார்கள். இதையும் நம்பி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள். டிக்கெட் இல்லாமலேயே டிக்கெட் இருப்பதாக கூறி ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதலில் கேட்டவுடன் பணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தி விடுகிறார்கள். பின்பு அந்த நம்பரைதொடர்பு கொண்டால் உபயோகத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இதை அறிந்து ரசிகர்கள் உஷராக இருக்க வேண்டும். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.