
18 ஆவது ஐபிஎல் சீசன் திருவிழாவானது நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதியதில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் நேற்று இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஐந்து முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியானது 19.1 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் சென்னை அணியானது பந்து வீசும் போது பால் டேம்பரிங்க் செய்யப்பட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் கலீல் அகமது தன்னுடைய பாக்கெட்டிலிருந்து ஏதோ ஒன்றைக் கேப்டன் ருத்ராஜ் கையில் கொடுக்கிறார் .அதை வாங்கிக் கொண்டு ருத்ராஜ் மறைத்து தன்னுடைய பாக்கெட்டில் வைத்து கொள்கிறார் . இந்த வீடியோவை வைத்து மும்பை ரசிகர்கள் உட்பட அனைவரும் பால் டேம்பரிங்க் செய்ததாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே சிஎஸ்கே அணி சூதாட்டத்தில் சிக்கியதாக இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
#CSKvsMI #IPL #RCB #MSDhoni #ViratKohli #IPL2025 #MI #RohitSharma #Thala #VigneshPuthur #Chepauk #Khaleel #ruthuraj @prasannalara #Noor #DeepakChahar #SRHvRR pic.twitter.com/OWjYP9KXdN
— ನಕ್ಷತ್ರಿಕ Nakshatrika (@PratiSrishti) March 24, 2025