
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தாவும், பெங்களூர் அணியும் விளையாட உள்ளது. இப்போட்டியில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்க உள்ளனர்.

இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகியவை அடங்கும். இப்போட்டி மார்ச் 22ஆம் தேதி முதல் மே மாதம் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.