கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் மெகா ஏலமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சமீபத்தில் அனைத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது ஐபிஎல் மெகா ஏலம் குறித்த விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்களை தக்க வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களின் சம்பளத்தையும் உயர்த்தியுள்ளதாக தற்போது ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களின் சம்பளமானது ஒரு போட்டிக்கு 7.5 லட்சம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு சீசன் முழுவதுமாக விளையாடினால் காண்ட்ராக்ட் அடிப்படையில் ரூ‌.1.5 கோடியை முழுமையாக பெறலாம். மேலும் இதற்காக ஒவ்வொரு அணியும் தலா ரூ‌.12.60 கோடி வரையில் பணத்தை ஒதுக்க வேண்டும் என்று ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.