இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 18-வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன்கள் வரை எடுத்திருந்தார். மும்பை அணியில் அறிமுக வீரராக களம் இறங்கிய அஸ்வினி குமார் 4 விக்கெட்டுகள் வரை வீழ்த்தினார்.

இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. அதன்படி அதிரடியாக விளையாடிய மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக ரிக்கெல்டன் 62 ரன்கள் வரை விளாசினார். மேலும் இந்த போட்டியின்  மூலம் மும்பை அணி ஐபிஎல் தொடரில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.