ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. 

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 9வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதியது. இதில்டாஸ்  வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டுபிளேஸிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி  கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களான வெங்கடேஷ் ஐயர் மற்றும் குர்பாஸ் இருவரும் களமிறங்கினர். இதில் வெங்கடேஷ் ஐயர் 3 ரன்னில் அவுட்டானபோதிலும் குர்பாஸ் சிறப்பாகஆடி  57 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.. பின்வந்தமன்தீப் சிங் 0,  நித்தீஷ் ராணா 1,  ஆண்ட்ரே ரசல் 0 என வரிசையாக அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்..

இதனால் கொல்கத்தா அணி 11.3 ஓவர்களில் 89 ரன்களுக்கு 5  விக்கெட் இழந்து தவித்தது. அப்போது ரிங்கு சிங் – ஷர்துல் தாக்கூர் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர்.. குறிப்பாக   தாக்கூர்  அதிரடியாகஆடி  அரைசதம் கடந்தார். அதன்பின் ரிங்கு சிங் 33 பந்துகளில் (2 பவுண்டரி, 3 சிக்ஸர்) 46  அவுட்டானார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய தாக்கூர் கடைசி ஓவரின்  4வது பந்தில் அவுர் ஆனார். தாகூர்  29 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 68 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.

பின்னர் பெங்களூர் அணி கடின இலக்கை நோக்கி களம் இறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் பாப் டுபிளேஸில் – விராட் கோலி இருவரும் களமிறங்கி அதிரடியாக தொடங்கினர்.  ஆனால் இந்த ஜோடி 5வது ஓவரில் பிரிந்தது.   விராட் கோலி 21 ரன்களில்  சுனில் நரேன் சுழலில் அவுட் ஆக, அதைத் தொடர்ந்து வருண் சக்கரவர்த்தியின் 6வது ஓவரில் கேப்டன் டுபிளேஸில்  23 ரன்களில் அவுட் ஆனார்..

அதன் பின் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர்.. மேக்ஸ்வெல் 5,  ஹர்ஷல் படேல் 0,  சபாஷ் அகமது 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.. பின் சிறிது நேரம் தாக்குப்பிடித்த பிரேஸ்வெல் 19,  தினேஷ் கார்த்திக் 9, அனுஜ் ராவத் மற்றும் கரண் சர்மா 1  என அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

தொடர்ந்து கடைசி விக்கெட்டுக்கு டேவிட் வில்லி –  ஆகாஷ் தீப் ஜோடி சேர்ந்து 27 ரன்கள் சேர்த்தது. இறுதியில் ஆகாஷ் தீப் 17 ரன்களில் அவுட் ஆனார்.  டேவிட்  வில்லி 20 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். பெங்களூர் அணி 17.4 ஓவரில்  123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகளும், சுயாஷ் சர்மா 3 விக்கெட்டுகளும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளும், தாகூர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.. . ஷர்துல் தாக்கூர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளி பட்டியல் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. அதே நேரத்தில் ஆர்சிபி 7வது இடத்திற்கு சரிந்தது.