
நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
2024 ஐபிஎல் மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி மதியம் 1:00 மணிக்கு இந்த ஏலம் தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மேன் பவல் 7.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விற்கப்பட்டார். ஒரு கோடி ரூபாய் அடிப்படை விலையான பவலை ரூ.7.40 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது. இதையடுத்து இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை 4 கோடிக்கு வாங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6.80 கோடிக்கு வாங்கியது. அதேபோல இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை ரூ 1.5 கோடிக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அதேபோல ஷர்துல் தாக்கூரை சென்னை அணி 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதனிடையே ஸ்டீவன் ஸ்மித், மனீஷ் பாண்டே, கருண் நாயர் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை..
Young Lion from the Kiwi Land! 🦁🥳 pic.twitter.com/wvEiZqaOCX
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2023