
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 முக்கிய வீரர்களை தூக்கியுள்ளது..
2024 ஐபிஎல் மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி மதியம் 1:00 மணிக்கு இந்த ஏலம் தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மேன் பவல் 7.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விற்கப்பட்டார். ஒரு கோடி ரூபாய் அடிப்படை விலையான பவலை ரூ.7.40 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது. இதையடுத்து இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை 4 கோடிக்கு வாங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6.80 கோடிக்கு வாங்கியது. அதேபோல இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை ரூ 1.5 கோடிக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. மேலும் ஸ்டீவன் ஸ்மித், மனீஷ் பாண்டே, கருண் நாயர் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை..
Travis Head sold to SRH at 6.80cr. pic.twitter.com/kfXgMRXUrU
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 19, 2023