ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், “பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல்” விற்பனையானது நடைபெற்று வருகிறது. இந்த விற்பனை மே 4ம் தேதி தொடங்கி மே 10 ஆம் தேதி முடிவடைகிறது. இவ்விற்பனையில் பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு பெரும் தள்ளுபடிகள் அளிக்கப்படுகிறது. அதேபோல் ஐபோன்களில் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன்-13 மிகவும் பிரபல மாடலாகும். தற்போது நடந்து வரும் சேலில் ஐபோன்-13 ஸ்மார்ட்போனை 30 ஆயிரம் ரூபாய்கும் குறைவான விலையில் வாங்கிக்கொள்ளலாம். ஐபோன்-13ன் அறிமுக விலையானது ரூ.69,900 ஆகும். எனினும் பிளிப்கார்ட்டில் இந்த போன் ரூபாய்.58,999 -க்கு கிடைக்கிறது.

மேலும் பல்வேறு வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் இதில் கிடைக்கிறது. இதனால் தொலைபேசியின் விலை கணிசமாக குறைக்கப்படும். எக்ஸ்சேஞ் ஆஃபரின் சலுகையை பெறுவதற்கு தங்களது ஸ்மார்ட்போன் லேட்டஸ்ட் மாடலாக உள்ளதையும், நல்ல நிலையில் இருப்பதையும் வாடிக்கையாளர்கள் உறுதிசெய்ய வேண்டும். அப்போது தான் ரூபாய். 28,000-க்கான இந்த எக்ஸ்சேஞ்ச் போனசை அவர்கள் பெற முடியும்.