
அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்ட் டிரம்ப்பின் மீது தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் டிரம்பை துப்பாக்கியால் சுட முயன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தாமஸ் குரூப் என்ற 20 வயது இளைஞர் என பின் நடந்த விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த நிலையில் டிரம்ப்பை கொலை செய்ய ஈரான் நாட்டில் சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டில் ஆளில்லா விமான மூலம் ஈரான் நாட்டைச் சேர்ந்த குத்சு படையின் தலைவர் காசிம் சுலைமானி கொல்லப்பட்டதை அடுத்து ஈரானிலிருந்து, அமெரிக்கா அதிபருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இந்த நிலையில் ஈரான் மீது அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் உத்தரவுகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப் ஈரான் தன்னைக் கொன்றால் அதை அழிக்க வேண்டும் என்று ஆலோசகர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். ஈரான் என்ற நாடே இருக்காது அவர்கள் முழுவதுமாக அழிக்கப்படுவார்கள் எதுவும் மிச்சம் இருக்காது என கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.