
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது பாஜக தீண்டத்தகாத கட்சி, பாரதி ஜனதா கட்சி நோட்டா கட்சி, பாஜகவால் நாங்கள் தோற்றோம் என்று அதிமுகவினர் குற்றம் சாட்டினார். ஆனால் இன்று பாரதி ஜனதா கட்சி வேண்டும் என்று தவம் இருக்கக்கூடிய சூழ்நிலையை என்னுடைய ஒவ்வொரு தலைவனும், தொண்டரும் உருவாக்கியுள்ளனர். இதற்கு நான் பெருமை அடைகிறேன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி எப்படி இருக்கும், அதில் முக்கிய கட்சியாக யார் இருக்கும், யார் தலைவர்? யார் முதலமைச்சர்? அதையெல்லாம் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை. எங்களுடைய நோக்கம் பாரதிய ஜனதா கட்சியை நிலை நிறுத்த வேண்டும். பாரதி ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்றெல்லாம் கூறுகிறார்கள். நாங்கள் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.