பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் லூதியானா மேற்குத் தொகுதி எம்.எல்.ஏவான குர்பிரித் போகி தற்செயலாக நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியினர் சார்பில் சஞ்சீவ் அரோரா நிறுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது பதவிக்காலம் 2028ல் முடிவடைய உள்ளதால் அவர் இடைத்தேர்தலில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றால் எம்.பி பதவியை ராஜினாமா செய்வார்.

அவ்வாறு எம்.பி பதவி காலியாக இருக்கும் பட்சத்தில் அந்தப் பதவிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி இதனை மறுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறியதாவது,”இதுபோன்ற செய்திகள் முற்றிலும் தவறானவை. அரவிந்த் கேஜ்ரிவால் மாநிலங்களவைக்கு செல்லவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து ஊரக வட்டாரங்கள் ஆதாரம் இல்லாத தவறான தகவல்களை தெரிவிக்கின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அவர் அதிகமான கோரிக்கையை வைத்துள்ளார். ஆனால் எந்த ஒரு இடத்திலும் அவர் நிற்கவில்லை”என தெரிவித்துள்ளார்.