தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்மையில் DMK files என்ற பெயரில் திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டு இருந்தார். இந்த சொத்து பட்டியலோடு சேர்த்து ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக கட்சியின் குடும்பத்தினருடையது என்றும் அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது அண்ணாமலைக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்தே எங்கள் நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் கட்டுமான விதிமுறைகள் அனைத்துக்கும் செயல்பட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தான் எங்கள் நிறுவனம் செயல்படுகிறது. இதுவரை ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நிலங்களை சிறப்பான முறையில் விற்பனை செய்துள்ளோம். கொரோனா காலத்தில் எங்கள் நிறுவனம் சார்பில் 4800 படுக்கைகள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசு மாடுகளை இறைச்சிக்கூடங்களில் இருந்து மீட்டு பராமரித்து வருகிறோம். சுற்றுச்சூழல் சார்ந்த பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.

இப்படி பல சேவைகளை செய்து வரும் எங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தனி நபர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எங்கள் நிறுவனம் செயல்படுவதாகவும், லாபம் ஈட்டுவதாகவும் ஊழலில் ஈடுபடுவதாகவும் பல கட்டுக்கதைகள் பரப்பப்படுகிறது. ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் முதல் உரிமையாளர்கள் திமுக குடும்பத்தினர் என்றும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 38,827.70 கோடி ரூபாய் என்றும் நீங்கள் வெளியிட்ட டிஎம்கே ஃபைல்சில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் தெரிவித்த அனைத்து தகவல்களும் உண்மைக்கு மாறானவை மற்றும் போலியானவை. இந்த குற்றச்சாட்டுகளுக்கும் எவ்வித கிடையாது. எங்கள் நிறுவனம் திமுக குடும்பத்தினருக்கு சொந்தமானது கிடையாது. மேலும் முறையாக ஆய்வு செய்தால் நீங்கள் வைத்த குற்றச்சாட்டுகள் போலியானவை என்று தெரிய வரும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்களை அணுகுங்கள் உரிய விளக்கங்களை கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.