பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழையின் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்தது. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசை விமர்சித்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் நேற்று முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமிக்கு குற்றச்சாட்டு முன் வைப்பதே வேலையாக இருக்கிறது. அவர் குற்றச்சாட்டுகளை நான் மதிப்பதே இல்லை என்று கூறினார். இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில் கொலை கொள்ளை போன்றவற்றால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.

போதைப்பொருள் பழக்கம் தலை விரித்து ஆடுகிறது. அது மட்டும் இன்றி ஆசிரியர்கள், மருத்துவர்கள், நெசவாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், தொழில் துறையினர் என அனைத்து தரப்பினரும் தெருவில் இறங்கி போராடும் சூழல் ஏற்படுகின்றது. இதைத்தொடர்ந்து குற்றச்சாட்டு வைப்பதே எனது வேலையாக போய்விட்டது என்று கூறும் மு.க ஸ்டாலின் அவர்களே, திமுக ஆட்சியின் அவல நிலையை சுட்டிக் காட்டுவது தான் எனது கடமை. அதற்கு முறையான நடவடிக்கை எடுத்து செயல்படுவது தான் அரசின் கடமை.

அப்படி எந்த திறமையும் இல்லாத ஒரு முதல்வரிடம் இப்படிப்பட்ட பதிலை தான் எதிர்பார்க்க முடியும் என்று குற்றம் சாட்டினார். மேலும் திமுகவிடம் நாகரிகத்தையோ, மக்கள் மீது அக்கறையோ எதிர்பார்க்க முடியாது. இதற்கு சான்று முதலவர் தரைகுறைவான பேச்சாகும். நிர்வாக திறன் அற்ற முதலமைச்சர் முடிந்தால் மக்கள் பணியை செய்யுங்கள், இல்லை என்றால் முடியாது என்று ஒப்புக் கொள்ளுங்கள். ஆட்சி இருக்கிறது என்ற ஆணவத்தில் நீங்கள் பேசும் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள் என்று கூறினார்.