உத்திரபிரதேஷ் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமாகும் ஆசையில் ஒரு இளைஞர் தனது உயிரை பொருட்படுத்தாமல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியோதனி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்ஜித் சௌரஸியா என்பவர், கான்பூர்-லக்‌னோ ரயில் பாதையில் படுத்து வீடியோ எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற நினைத்தார். இந்த வீடியோ வைரலானதும், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது போன்ற செயல்கள் இந்திய ரயில்வே சட்டத்தின் பிரிவு 145 மற்றும் 147ன் கீழ் குற்றமாகும் என்றும், இது உயிருக்கு ஆபத்தானது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய இளைஞர்கள் சற்று யோசிக்காமல் வெறும் லைக் மற்றும் ஃபாலோவர்களுக்காக அபாயகரமான வீடியோக்கள் எடுத்து சமூக ஊடகங்களில் பரப்ப முயற்சிக்கின்றனர்.

 

பொதுமக்கள் அனைவரும் இந்த போக்கை தவிர்த்து, தங்களது உயிரை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. “பாதுகாப்பே முதன்மை, வைரல் பிறகு” என்பதே சமூகத்தில் பரவவேண்டிய முக்கியமான செய்தி என்று அவர்கள் கூறுகின்றனர்.