நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாத கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் சமூக ஜனநாயகம் குறித்த உரையை நிகழ்த்தினார். இதில் அவர் கூறியதாவது, டாக்டர் அம்பேத்கர் 75 ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் ஜனநாயகத்தை வென்று விட்டோம் ஆனால் சமூக ஜனநாயகத்தை, பொருளாதார ஜனநாயகத்தை வெல்வது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் இருந்தால் மட்டுமே சமூக ஜனநாயகத்தை வென்றெடுக்க முடியும் என டாக்டர் அம்பேத்கர் அன்றே கூறியுள்ளார். சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரமாகிய அனைத்தும் இணைந்து நடைமுறைப்படுத்தும் போது தான் தேசியம் என்று கருதப்படும்.

சமூக ஜனநாயகத்தை உருவாக்க யோசனை கூறிய டாக்டர் அம்பேத்கர் இது குறித்து மிகவும் வருத்தத்திற்குரிய கருத்தையும் பதிவு செய்திருந்தார். நாட்டை விட மத நம்பிக்கையை மேலாக கருதும் போது நாடு சுதந்திரம் அடைந்ததை இழக்க நேரிடும் என வருத்தமாக கூறினார். அவர் தீர்க்கதரிசனமாக கூறியதைப் போன்று இன்று நமது நாட்டில் மதத்தை முன்னிலை வைத்து அரசியல் நடைபெற்று வருவதை நம்மால் கண்கூடாக காண முடிகிறது என்ற தனது விவாதத்தை முன் வைத்தார்.