அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரம் மேம்படுத்தப்பட்ட நகரங்களில் ஒன்றாகும். பலரும் நியூயார்க்கை மிகவும் சுகாதாரமான நாடு என கூறுகின்றனர்.

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த யூடியூபர் லவ் சோலங்கி ருத்ராட்ஷ் என்பவர் நியூயார்க் சுற்றுலா சென்ற போது வெளியிட்ட வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வீடியோவில் நியூயார்க் மெட்ரோவில் அனைவரும் கற்பனை செய்து பார்க்காத அளவிற்கு மனித கழிவுகள், எலிகள், மது குடித்து மயங்கி கிடக்கும் பயணிகள், சுத்தமில்லாத மேடைகள் என இருந்தது.

மேலும் இந்த வீடியோவை பதிவு செய்த யூடியூபர் கூறியதாவது, நான் நியூயார்க் மெட்ரோவில் கலர் கலரான ஆடைகள் அணிந்த மக்களை ரசிக்கிறேன். ஆனால் ஒரு மூச்சு எடுத்தாலே சிறுநீர் நாற்றம் தான் தனது பதிவை வெளியிட்டு இருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மில்லியன் காண பார்வையாளர்களைக் கடந்து வருகிறது. பலரும் அமெரிக்காவின் சுத்தம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.