நாமக்கல் மாவட்டம் காந்திபுரம் என்னும் பகுதியில் முத்தையா- சினேகா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் பூவரசி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்த நிலையில் மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அப்போது தனது பெற்றோருடன் வசித்து வரும் சினேகா அப்பகுதியில் கூலி வேலைக்கு சென்ற நிலையில் அங்கே அவருடன் வேலை பார்க்கும் சரத் என்பவருடன் கள்ளக்காதல் உருவானது.

இந்த கள்ளக்காதல் நாளடைவில் மலர்ந்த நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த கள்ள தொடர்பு விவகாரம் சினேகாவின் குடும்பத்திற்கு தெரிந்து விட்டது. இதனால் கோபமடைந்த பெற்றோர் சினேகாவை கண்டித்தனர்.

இதைத்தொடர்ந்து இவர்களின் கள்ளக்காதலுக்கு சினேகாவின் மகள் இடையூறாக இருந்ததால் அவளை கொலை செய்ய வேண்டும் என்று சினேகா முடிவெடுத்தார். அதன்படி சினேகா தனது பெரியப்பா மகள் கோகிலாவின் உதவியுடன் தூங்கிக் கொண்டிருந்த பூவரசியை தோட்டத்தில் உள்ள கிணற்றில் தூக்கி வீசினார்.

இதனால் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது. இதனை அடுத்து குழந்தையின் உடல் கிணற்றில் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியிருந்த சினேகா கோவிலா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.