மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் தெர்க்கமூர் அரசு மழலையர் மற்றும் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தாய் நாட்டின் பாரம்பரிய பாடலான “Anan Ta Pad Chaye”க்கு பாடி ஆடிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, பள்ளியின் ஆசிரியை ஒருவரால் பதிவிடப்பட்ட நிலையில் குழந்தைகள் பாடிய தாய் வார்த்தைகள் தமிழ் மொழியில் “அண்ணன பாத்தியா? அப்பாவ கேத்தியா?” என ஒலிக்க, அதை மாணவர்கள் ஆர்வமுடன், சிரிப்புடனும் பாடும் காட்சிகள் இணையதள வாசிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

அந்த மாணவர்களில் சிறுமி சிவ தர்ஷினி சிறப்பாக செயல்பட்டார். அவருடைய உற்சாகத்தையும், நம்பிக்கையுடன் பாடும் காட்சியையும் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுக்கள் கூறி வருகின்றனர். அதோடு, “Shivadarshini believes in herself” என தன்னம்பிக்கையுடன் கூறும் மற்றொரு வீடியோவும் வைரலாகி, இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல் தாய்லாந்து நாட்டு காமெடியன் மற்றும் பாடகர் Noi Chernyim மூலம் பரவலாகப் பரவியது. சமீபத்தில் இந்தியாவில் இது தமிழ் வார்த்தைகளை ஒத்த சத்தம் கொண்டதால் அதிகமாக பேசப்பட்டது.

மேலும் மாணவர்களின் இந்த வீடியோ டிரெண்ட் ஆனதற்கு காரணம் பாடலின் வரிகள் அல்ல மாணவர்கள் வெளிப்படுத்திய உற்சாகம் மற்றும் ஆர்வம் என்று இணையதள வாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.