சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில், ஒரு இளைஞர் ஸ்கூட்டியில் செல்லும் போது, சினிமா ஸ்டைலில் வானத்தில் பறந்து எதிரே வந்த கார் மீது நேராக மோதி விழும் அதிரடியான காட்சி காணப்படுகிறது. ஆச்சர்யம் என்னவென்றால், அந்த இளைஞருக்கு சிறிதும் காயம் ஏற்படவில்லை.

வீடியோவில் அவர் ஒரு உண்மையான சூப்பர்மேன் போல் மீண்டும் எழுந்து நடந்து செல்லும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வீடியோவை @Kamal_parody என்ற X பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, லட்சக்கணக்கான பார்வையாளர்களையும், பல்வேறு வேடிக்கையான மற்றும் அதிர்ச்சியூட்டும் கருத்துகளையும் பெற்று வருகிறது.

 

சிலர் இதை சல்மான் கான் படத்தின் ஸ்டண்ட் டைரக்டர் மாதிரியே இருக்கிறது என கலாய்த்துள்ளனர். சிலர் “இதுக்கு நேர்ல ஆஸ்கார் குடுக்கலாம்!” என கூறுகின்றனர். ஆனால், ஒரு பகுதி பயனர்கள் இந்த வீடியோ சட்டத்திற்குப் புறம்பானதாகவும், ஆபத்தான செயலாகவும் கருதி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கின்றனர்.

இவ்வாறு விதிமுறைகளை மீறி சாலை பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் ஸ்டண்ட்களை யாரும் பின்பற்ற வேண்டாம் என சமூக வலைதள பயனர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.