
செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, ஆரியம், திராவிடம் எல்லாம் தெரிந்து கொள்ள இதற்கெல்லாம் புராணம் படிக்க வேண்டும்.நான் அந்த அளவு படிச்சவன் அல்ல. இந்த கதை எல்லாம் படிக்கவில்லை. இதையெல்லாம் படித்து சொல்ல வேண்டும். இதற்கெல்லாம் ஒரு ஆய்வு பண்ண வேண்டும். ஆய்வு பண்ணால் தான் இது உண்மையா ? பொய்யா ? என்று தெரியும்.
இது ஆளுநரை தான் கேட்க வேண்டும் ஆளுநரிடம் கேட்க வேண்டிய கேள்விக்கு என்னை கேட்டால் எனக்கு எப்படி தெரியும். அது அறிஞர்கள் பார்த்து கேட்டால்தான் அது சரியா ? தப்பா ? என்று தெரியும். இது உண்மையா ? பொய்யா ? என்பதற்கு ஆய்வு செய்தால் தான் தெரியும். ஆய்வு செய்யாமல் நீங்கள் கேட்க கேள்விகளுக்கு தவறான பதில் கொடுத்துடக்கூடாது.
இது தேவை இல்லாத கேள்வி. யாரை கேட்க வேண்டுமோ, அவர்களை கேளுங்கள். அப்போதுதான் அதற்குண்டான பதில் கிடைக்கும். நாடாளுமன்ற தேர்தலில் தெளிவாக சொல்லிவிட்டேன். அண்ணா திமுக பாரதிய ஜனதா கூட்டணி இல்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் ஒரு சிறப்பான கூட்டணி அமையும். வலுவான கூட்டணி அமையும். 2024 மட்டுமல்ல, 2026லும் அண்ணா திமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும். 2026லும் பாரதிய ஜனதா கட்சியோடு அண்ணா திமுக கூட்டணி இலை உறுதிப்பட சொல்லுகிறேன் என தெரிவித்தார்.