
மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்யா கட்காரிபாடா பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் பாட்டில். அவரது 50 வயது மனைவி அப்பகுதியில் குப்பை தூய்மை தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக கணவன் மனைவியிடையே சந்தேகம் காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி இரவு முழுவதும் அப்பெண் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். மேலும் நரேஷ்க்கு வாடி பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் மனைவி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த நரேஷ் சம்பவ இடத்திற்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த மனைவியை எழுப்பி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அடுத்து தன்னுடன் வீட்டிற்கு வருமாறு வற்புறுத்தி உள்ளார். அதற்கு அவரது மனைவி மறுத்ததால் ஆத்திரத்தில் அருகில் கிடந்த கல்லை எடுத்து மனைவியை தலையில் சாராமாரியாக தாக்கியுள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து அப்பெண் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் நரேஷை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளதாக நரேஷ் ஒப்புக்கொண்டார். இதனைஅடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.