
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நீண்ட காலமாக சிறையில் இருக்குற இஸ்லாமியர்களை விடுதலை செய்வதை நான் வன்மையா கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன். ஏன்னா…. என்னை பொறுத்தவரைக்கும் தீவிரவாதத்துக்கு கலர் கிடையாது. தயவு செஞ்சி தீவிர வாதத்தை ஒரு சமுதாயத்துக்குள்ள… ஒரு ஜாதிக்குள்ள… ஒரு மதத்துக்குள்ள அடைக்க வேண்டாம்.
கோயம்புத்தூரில் தற்கொலை தாக்குதல் குண்டு வெடிப்பு நடந்தது. ஜமாத் கண்டிச்சாங்க… .மாநில அரசே சிலிண்டர் வெடிச்சிடுன்னு சொல்லிட்டு இருக்கும் போது ஜமாத் அதை கண்டிச்சாங்க. ஜமாத் கண்டிச்ச பொழுது, நான் ஜமாத் அவங்கள பாராட்டினேன். ஜமாத்ல இருக்க கூடிய பெரியவர்கள், உண்மையாலும்… கோயம்புத்தூர்க்கு வந்து இருக்க கூடிய ஆபத்தை பத்தி பேசுறீங்க…. உண்மையாலுமே நான் உங்களை மதிக்கிறேன் என சொன்னேன்.
கோயம்புத்தூர் பாம் பிளாஸ்ட்டை நான் தீவிரவாதிகளா பாக்குறேன். வெளியே விடக் கூடாது. இப்போதான் கோயம்புத்தூர் தற்கொலை குண்டு வெடிப்பு நடந்து முடிஞ்சி, 13 பேர் கைதாகி…. ரெண்டு சார்ஜ் சீட் போட்டு இருகாங்க. இந்த நேரத்துல யாரையுமே வெளிய விட கூடாது என்பது தான் பாரதிய ஜனதா கட்சி நிலைப்பாடு. இதுல தெளிவா சொல்லனும்னா…. நான் இதை இஸ்லாமியர்கள் என அடைக்க விரும்பலை.
அன்னைக்கு செய்தவர்கள் இஸ்லாமியர்களாக இருக்கலாம். ஆனால் இன்னைக்கு இஸ்லாமியர் என்பதால் விடுதலை பண்ணனும் என கிடையாது, அவங்க தீவிரவாதி. எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் கிடையவே, கிடையாது.. எத்தனையோ நல்லவர்கள் இருக்காங்க. எல்லாரும் நல்லவர்கள் தான்… 0.00001 % தப்பு பண்றதுக்காக ஒரு சமுதாயத்தை தவறா பேசக்கூடாது.இதான் பாரதிய ஜனதா கட்சிக்கும், இன்னொரு கட்சிக்கும் இருக்கக்கூடிய நிலைப்பாட்டினுடைய அடிப்படை வித்தியாசம்.
ஏன் வெளிய விட கூடாதுன்னா ? இஸ்லாமியர்கள் என்பதற்காக நான் சொல்லலை. தீவிரவாதி என்பதற்காக அவங்களை வெளில விடக்கூடாது. தமிழகத்தில் தீவிரவாதி தொடர்பு இன்னும் இருக்கு. மாநில அரசு அதை கட்டுபடுத்தலை. கோயம்புத்தூர் தீவிரவாதிகளை வெளிய விடுறது, இஸ்லாமிய சொந்தங்களுக்கும் எதிரானது. இதை முதலமைச்சர் அவர்கள் ஒரு ராஜாதர்மமாக பாத்து முடிவு எடுப்பார்ன்னு நான் நம்புறேன். ஒரு முதலமைச்சராக இருக்கும் பொழுது ராஜா தர்மமாக இதை பார்ப்பார் என தெரிவித்தார்.