
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், நீலகிரியில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. பாலியல் வன்கொடுமைக்கு யார் பாதிப்பானர்களோ, அந்த சிறுமியை கைவிலங்கு போட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக அனைத்து செய்திகளிலும், ஊடகங்களிலும் செய்தி வந்திருக்கிறது.
இது உலகத்தில் எங்குமே நடைபெறாத ஒரு மிகப்பெரிய கொடுமை. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியை…. புகார் கொடுத்த சிறுமியை…. கைவிலங்கு போட்டு அழைத்துச் சென்ற அதிசயம் ஹிட்லர் ஆட்சியில் கூட நடைபெறாது. இந்த ஸ்டாலினுடைய திமுக ஹிட்லர் ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை யாராவது இன்றைக்கு கேட்டிருக்கின்றார்களா ? இதையெல்லாம் மூடி மறைப்பதற்கு இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தமிழக அரசு இந்த கார் பந்தயத்திற்கு 42 கோடி வழங்கி இருக்கிறது. ஒரு பக்கம் ஏழைகள் பயன்படுத்துகின்ற பால்…. குறைந்த கட்டணமான மேஜிக் பாலை இன்றைக்கு நிறுத்தி இருக்கிறது. அதிக விலைக்கு பாலை இன்றைக்கு விற்பனை செய்கிறது. இப்படி மக்களை ஒரு பக்கம் வஞ்சித்து கொண்டு…. மக்களை துயரத்தில் ஆழ்த்திக்கொண்டு இன்றைக்கு இந்த அரசு சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.