இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் லபானன் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டது எனத் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. காசாவை இலக்காக வைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 42,000 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நசரல்லாவை இஸ்ரேல் கொலை செய்ததற்கு பின்பு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக நயீம் காசின் பதவியேற்றார்.

இதைத் தொடர்ந்து நயீம் காசின் பதவியேற்ற பின் முதல் முறையாக பேசிய போது, இஸ்ரேலுடன் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளோம். குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு போரை நிறுத்த இஸ்ரேல் விருப்பப்பட்டால் அதனை ஹிஸ்புல்லா அமைப்பு ஏற்றுக் கொள்ளும் என தெரிவித்திருந்தார். ஆனால் இஸ்ரேல் இதனை ஏற்காமல் தொடர்ந்து ஈரானுடனும் போரில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ அணு ஆயுதத்தளங்களை தாக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்தது.

இதனைத் தொடர்ந்து லெபானன் மீது நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார். அடுத்தடுத்து லெபானின் நாசர் பிரிகேட் ராக்கெட் முக்கிய தளபதி ஜாபர் காதர் பவுர் கொல்லப்பட்டார். இவர்தான் இஸ்ரேலை தாக்குவதற்கு பலமுறை மூளையாக செயல்பட்டவர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து லெபானின் கடற்படை பகுதியில் ஊடுருவிய இஸ்ரேல் ராணுவ காமெண்ட்டாக்கள்  தலைமறைவாகியிருந்த ஹிஸ்புல்லா கடற்படை தளபதி இமாத் ஹமீசை கைது செய்தனர் . இவர் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஆவார்.