
காசா பகுதியை பொருத்தவரை 51 கிலோ மீட்டர் நீளமும், 19 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட செவ்வக வடிவிலான ஒரு கிழக்கு பகுதியாகும். காசா பகுதியில் 22 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். ஐந்து நகரங்கள் இருக்கிறது. குறிப்பாக வடக்கு காசாவில் ஆரம்பித்து கான் யூனிஸ் வரை 5 தனி தனி நகரங்கள் இருக்கின்றது. ஒவ்வொரு நகரத்திலுமே நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
இப்போது இருக்கின்ற பிரச்சனை என்னவென்றால் ? காசா பகுதியினுடைய தெற்கு நோக்கிய எல்லையில் தான் எகிப்து இருக்கின்றது. எகிப்து வழியே தான் பாலஸ்தீன மக்கள் வெளியேற முடியும். எனவே வடக்கு பகுதியில் இருக்கும் மக்களை தெற்கு நோக்கி அனுப்ப வேண்டும். ஆனால் அவர்கள் கொடுத்துள்ள மூன்று மணி நேரம் காலகெடு என்பது மக்களை வெளியேற்றுவதற்கு போதுமானதாக இருக்காது.
11 லட்சம் மக்கள் மூன்று மணி நேரத்திற்குள் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதியை விட்டு வெளியேறுவது சிரமமான காரியமாக இருக்கும். காசா நகரத்தில் கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதும், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் பரிதவிப்பதும், உணவு -குடிநீர் – மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லா நிலை இருந்து வருகிறது.