நாட்டின் அறிவியல் கல்வி பயணத்தில் மிக முக்கிய பங்காற்றியவர் தான் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தொலைநோக்கு கொண்ட அவரின் தலைமை தன்னலமற்ற சேவையை நாடு என்றும் மறக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய விண்வெளி அமைப்பை உலக அரங்கில் உயரச் செய்தவர் என்று அவரை, பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். அன்னாரின் குடும்பத்தினர் விஞ்ஞானிகள் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துள்ளார்.