
தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
இதனையடுத்து ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்.