தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மூப்பன் பட்டி பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் சொகுசு கார்கள் மூலம் கஞ்சா கைமாற்றப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மூப்பன்பட்டி பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு நடத்தி வந்தனர். அதன்படி நேற்று மாலை மூப்பன்பட்டி சுடுகாடு பகுதி அருகே சிலர் காரில் இருந்து கஞ்சாவை கைமாற்ற நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு காவல்துறையினர் வருவதை அறிந்ததும் காரில் இருந்தவர்கள் இறங்கி தப்பித்து ஓடினர். அவர்களை காவல் துறையினர் துரத்தி சென்று கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கொம்பையா(21), அருண்குமார்(23), மகாராஜா(18), கார்த்திக்(20),என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்து 23 கிலோ 720 கிராம் உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.