
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கும் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருப்பதியில் வைத்து எளிமையாக நடைபெற்ற நிலையில் எந்த பிரபலங்களின் திருமணமும் பேசப்படாத அளவுக்கு ரவி-மகா ஜோடியின் திருமணம் வலைதளங்களில் பல மாதங்களாக வைரலாக பேசப்பட்டது. ஏனெனில் ரவீந்தர் உடல் பருமனாக இருந்ததால் பணத்திற்கு ஆசைப்பட்டு தான் மகாலட்சுமி அவரை திருமணம் செய்ததாக இணையத்தில் பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டது.
ஆனால் இந்த விமர்சனங்களுக்கு ரவி மற்றும் மகா பதிலடி கொடுத்ததோடு அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரவி மற்றும் மகா ஜோடி அடிக்கடி தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுவார்கள். அந்த வகையில் தற்போது தங்களுக்கு திருமணம் முடிந்த 6 மாதங்கள் ஆகிவிட்டது என கூறி ரவி மற்றும் மகா ஜோடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த புகைப்படங்களுக்கு தற்போது ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருவதோடு, அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram