
மகாராஷ்டிராவில் அம்மணி என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய 5 வயது மகள் படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த அந்தப் பெண் சூடு கம்பியை எடுத்து தனது குழந்தையின் முகம், கழுத்து போன்ற பல இடங்களில் சூடு வைத்துள்ளார். இந்நிலையில் குழந்தையின் தந்தை சுபம் மோகிந்திராவ் மாக்ரே என்பவர் இரவு வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது தனது மகள் அழுவதை பார்த்த அவர், மகளின் கை கால்களில் தீக்காயம் இருப்பதைக் கண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது மகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அதன் பிறகு இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தாய் அம்மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.