சென்னை சூப்பர் கிங்ஸ்ன் கேப்டன் மகேந்திர சிங் தோனி. கேப்டன் என்றாலே தோனி தான். பல விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற பின் வெளியே தெரிவதில்லை. ஆனால் தோனி எப்பொழுதுமே சூப்பர் ஸ்டார் தான். ஒரு வருடத்திற்கு 14 முறை மட்டுமே தளத்தில் இறங்கும் தோனி எப்போதுமே தனி சிறப்பு தான். இவருக்கு தற்போது 43 வயதாகிறது சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும் அவரது செயல்பாடுகள் இன்றைக்கும் தலைப்பு செய்தியாகவே உள்ளன. தோனி மைதானத்திற்கு வந்தால் மட்டுமே போதும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பர்.

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி 2024 ஆம் ஆண்டில் 6 மாதங்களில் 42 விளம்பர நிறுவன ஒப்பந்தங்களை பெற்றுள்ளார். இதுகுறித்து டேம் மீடியா ரிசர்ச் மற்றும் இங்கிலாந்தின் காந்தார், அமெரிக்காவின் நீல்சன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது. நடிகர்களை காட்டிலும் தோனி முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் நடிகர் ஷாருக்கான் 34 ஒப்பந்தங்களையும் மற்றும் அமிதாப்பச்சன் 41 ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளனர்.

இந்திய முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி 24 ஒப்பந்தங்களை பெற்று இந்த வரிசையில் 8வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி உரையாடல் ஒன்றில் பிராண்ட் யூத்தி நிபுணர் ஒருவர் தோனியை குறித்து கூறியதாவது,”தோனி என்பவர் விளையாட்டை தாண்டி அப்பாற்பட்டவராக அனைவராலும் கருதப்படுகிறார்”எனக் கூறியுள்ளார். இதேபோன்று அன் கேப்ட் வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 கோடி ரூபாய்க்கு தோனியை தக்க வைக்க முழு காரணம் அவரது ரசிகர் பட்டாளமே ஆகும்.