
கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், பெரியார் பற்றி கொண்ட இடம் இரண்டு. ஒன்று கூட்டம் போட்டு பேசுவது … இரண்டாவது எழுத்து மூலம் தம் கருத்தை சொல்லுவது…. அவர் பெரியார் பெரிதாக கலைகள் மேல் ஈடு இல்லாததால், அதை பெரியார் கையில் எடுக்கவில்லை. அதை அறிந்து கொண்ட கலைஞரும், அண்ணாவும் மிகச் சரியாக சினிமாவை கையில் எடுத்தார்கள். ”பராசக்தி” போல் ஒரு படம்…..
இன்றைக்கு பராசக்தி என்றால் என்ன தோணும் உங்களுக்கு ? 70 வருடம் ஆனது…. 70 வருடத்தில் என்ன தோணும் என்றால், வசனம் என்று சொன்னவுடனே…. பராசக்தி என்று சொன்ன உடனே…. அம்பாள் எப்பொழுதுடா பேசினால் என்பது தான் தோணும்… இல்லையென்றால் கோர்ட்டில் நின்னு சிவாஜி கணேசன் பேசிய ஓடினால் ஓடினால் வாழ்கையின் ஒரத்துக்கே ஓடினாள் அப்படி என்பது தோன்றும்… கோர்ட்டுக்கும் அந்த கதைக்கும் சம்பந்தம் இருக்கிறதா ?
அந்த படம் அண்ணன் தங்கச்சி வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக வந்த ஒரு குடும்பக் கதை… அந்த குடும்பக் கதைக்குள் கொண்டு போயி அன்றைக்கு தான் சொல்ல வேண்டிய செய்தி, இந்த சமூகத்திற்கு என்ன இருக்கிறதோ ? அந்த செய்தியை எல்லாம் உள்ளே ஏத்தி… ஒரு மாறா காவியமாக 70 ஆண்டு காலத்திற்கு பராசக்தியை நிலைக்க வைத்தது கலைஞர் எழுதிய மூன்றே மூன்று கோர்ட் சீன். படத்தினுடைய நோக்கம் எல்லாத்தையும் மாற்றி விட்டது…
அப்போ தாம் எது செய்ய வருகின்றோம் ? எது எழுதுகின்றோம் என முடிவு பண்ணி… அதை எழுதியதால் தான் இன்றைக்கு வரை….. கதை, திரை கதை, வசனம். கலைஞரே என்றைக்கும் சிகரம் என்று ஒத்துக் கொண்டார்… கலைஞருடைய மிக சிறப்பு என்னவென்றால், இந்த உலகத்திலேயே ஒரு எழுத்தாளன் பெயரால் கடைசி படம் வரை அறியப்பட்டது என்பது கலைஞருக்கு மட்டும்தான். ஏனென்றால் சிவாஜி நடித்தாலும் கலைஞரின் பராசக்தி தான்…. எம்ஜிஆர் நடித்தாலும் கலைஞரின் மந்திரி குமாரி தான்.
சத்யராஜ் நடித்தாலும் கலைஞரின் பாலைவன ரோஜாக்கள் தான்…. அது யார் நடிச்சாலும் சரி, அது கலைஞரின் படம் தான்… அதற்குள்ளே இருக்கின்ற ஆள் வேற வேற ஆள் இருக்கலாம். ஒரு எழுத்தாளனால் ஒரு படம் அறியப்பட்டதே கிடையாது. இயக்குனரால் அறிய பட்டு இருக்கும்.. ஸ்ரீதருக்கு பின்னாடி இயக்குனர் பெயரால் படம் அறியப்பட்டு இருக்கு. பாலச்சந்தரின் படம் என்று வந்திருக்கிறது…. ஆனால் வெறுமனே ஒரு வசன கர்த்தவராக மட்டும்…. உரையாடல் ஆசிரியராக மட்டுமே பங்காற்றி… எனக்கு இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது…
சிறு வயதில் என் தந்தை என்னை படத்திற்கு கூட்டிட்டு போகும் பொழுது… எந்த படத்திற்கும் என் தந்தை பதட்டமாக போகவே மாட்டார்.. அது என்ன முதல் ஐந்து நிமிஷம்… 5 நிமிஷத்துல கதை எல்லாம் நடந்திட போறதில்லை… போய்ட்டு போகுது என நிதானமாக தான் சைக்கிளில் ஏற்றி வைத்து கூப்பிட்டு போவாரு..ஆனால் கலைஞரின் படத்துக்கு மட்டும் 10 நிமிஷத்துக்கு முன்னாடியே வீட்டுல பதட்டமாய் கிளம்பு கிளம்பு என்று சொல்லி தியேட்டர் கூட்டிட்டு போவாரு.
ஏன் என்றால், கலைஞர் வசனம் எழுதிய படத்தில் முதல் 10 நிமிடம் கலைஞர் தோன்றி பேசுவார்… அதுதான் மொத்த படம். ஒரு படம் என்பது இருக்கிறது அல்லவா… கலை துறை சார்ந்த வேலை இருக்கிறது அல்லவா… 20 வருஷத்துக்கு முன்னாடி குஷி என்ற விஜய் படத்தில் எடுத்தவுடனே ஒரு ஆம்பள பிள்ளை பிறக்கும்… பக்கத்து வாட்டுல பொம்பள பிள்ளை பிறக்கும்…
இரண்டு பிள்ளையையும் ஒரு வார்டில் இருந்து, இன்னொரு வார்டு கூப்பிட்டு போகும் போது… பிறந்த 2 குழந்தைகளின் கை உரசும்… அப்போது இயக்குனர் சொல்லுவாரு இந்த பெண் குழந்தை தான் படத்தின் கதையாகி, ஆண் குழந்தை தான் இந்த படத்தின் கதாநாயகன். இவர்கள் இருவரும் எவ்வாறு சேர்கிறார்கள் ? என்பது தான் இந்த கதை என்று சொல்லி தான் படமே தொடங்கும். அது என்க இருந்து எடுத்து என்றால் ,
ஷேக்ஸ்பியரின் டெம்பஸ்ட்-இல் இருந்து வந்தது. ஷேக்ஸ்பியரின் டெம்பஸ்ட் என்ற நாடகத்தில் மன்னனால் வஞ்சிக்கப்பட்டு… தம்பியால் வஞ்சிக்கப்பட்டு… அரசு இழந்த ஒருத்தன் காட்டுக்குள் போய் இருப்பான்…. அவளுக்கு ஒரு மகள் இருப்பாள்… அவளுடைய முறை பையன் இளவரசனாக இருப்பான்… அவன் வருவான்…. வந்து இந்த பெண்ணை பார்த்த உடனே முதல் காட்சியில் காதல் கொண்டு விடுவான்…. அந்த காதல் தடுப்பார் அப்பா. காதல் கூடாது என்று சொல்லுவார்…
கூட இருந்த நல் தேவதைகள் எல்லாம் கேட்கும்… ஏன்ப்பா அவன் காதலித்து விட்டான் என்றால்? இவள் ராணியாகி விடுவாள்… ராணி ஆகிவிட்டால் நாடு உனக்கு வந்துவிடும்…. ஏன் இந்த காதலை கெடுக்கிறாய்….. இதுதானே கதை…. அப்பா சொல்லுகின்றார்…… அது இந்த கதை…. ஆனால் என் மகள் அதைவிட ஓவியமானவள்…. இவ்வளவு எளிதாக கிடைத்தால், என் மகளின் அருமை தெரியாது… அதனால் இந்த கதையின் காடைசியில் சேரட்டும் என்று எடுத்தவுடனே ஷேக்ஸ்பியர் சொல்லி தான் ஆரம்பிப்பார். ஒரு கதை என்பது எடுத்தவுடன் சொல்ல கூடாது.
சொன்னால் இந்த கதையில் என்ன சுவாரஸ்யம் இருக்கு… ஆனால் அப்படி சுவாரசியமாக இரண்டு கதை பார்த்திருக்கிறோம்.. நான் படித்திருக்கிறேன்… ஒன்னு ஷேக்ஸ்பியரின் டெம்பஸ்ட் படித்து இருக்கேன். இன்னு ஒன்னு விஜய் நடித்த குஷி பார்த்து இருக்கேன்… ஆனால் கலைஞர் தன் வாழ்நாளில் எழுதிய எல்லா படங்களுக்கும்…. எடுத்து உடனே வந்து, அந்த படம் எதைப் பற்றி ?
என்ன பிரச்சனை பேசப்போகிறது ? அதுல என்ன சிக்கல் ? என எல்லாவற்றையும் பேசி….. வாருங்கள் கண்டு களிக்கலாம் என்று சொல்லித்தான் படத்திற்குள் கூட்டிப் போவார்…. என்னடா மனுஷன் வந்தவுடனே எல்லா படத்தையும் மொத்தமா சொல்லுவார்….. தமிழ்நாடே பார்த்தது…. காரணம் அந்த கதையை விட மிகச் சிறப்பாக இருந்த கலைஞரின் உரையாடலுக்காக காத்துக் கொண்டே இருந்தது தமிழ்நாடு என பெருமை உடன் பேசி முடித்தார்.