விசித்திரமான பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கான புதிய சின்னமாக, ரெப்டைல் மிருகக்காட்சிசாலையின் நிறுவனர் ஜே ப்ரூவர், தனது பிறந்த நாளை ராட்சத மலைப்பாம்புகளுடன் கொண்டாடிய வீடியோ சமீபத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில், ப்ரூவர், பாம்புகள் கொண்ட சூழலில் தன் பிறந்த நாளைப் கொண்டாடுவதைக் காணலாம், இது நெட்டிசன்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜே ப்ரூவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இது பாம்பு விருந்து! இன்று எனக்கு பிறந்த நாளாகும், எனது பயணத்தில் என்னைப் பின்தொடர்ந்த அனைவருக்கும் நன்றி!” என்றும், வீடியோவைப் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில், பாம்புகள் நிறைந்த அந்த இடத்தில், ப்ரூவர் சுற்றப்பட்டு காணப்படுகிறார், இது அவரது துணிச்சலையும், அடிக்கடி பகிரும் வித்தியாசமான வீடியோக்களுக்கான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் அங்கீகாரம் பெற்றுள்ளது. நெட்டிசன்கள், ப்ரூவரின் இந்த வித்தியாசமான பிறந்தநாள் விழாவைப் பாராட்டி, “நான் இதுவரை இதுபோன்றதைப் பார்த்ததில்லை,” எனக் கூறியுள்ளனர். இது பொதுவாக முந்தைய பிறந்தநாள் விழாக்களைப் போல இல்லாமல், மிகவும் வித்தியாசமான மற்றும் அசாதாரணமான அனுபவமாகவிருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Jay Brewer (@jayprehistoricpets)